கொவிட்-19 பரவலை ஷாங்காய் கட்டுப்படுத்துவது உறுதி
2022-04-12 15:00:43

சீன மத்திய அரசும் தொடர்புடைய மாநில அரசுகளும் ஷாங்காய் கொவிட்-19 தடுப்புப் பணியில் பெரும் கவனம் செலுத்தி வருகின்றன. சீனாவின் பல்வேறு இடங்களின் உதவியுடன், ஷாங்காய் கொவிட்-19 பரவல் கூடிய விரைவில் கட்டுப்படுத்துப்படும் என்று நம்புகிறோம். சீனாவில் பிற இடங்களின் பரவலையும் கட்டுப்படுத்துவதில் நம்பிக்கையுடன் உள்ளோம் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லீச்சியன் 11ஆம் நாள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சீனாவின் தொற்றுநோய் தடுப்புக் கொள்கை நாட்டின் நிலைமை மற்றும் வைரஸ் தடுப்புக்கு பொருத்தமானது. அதே வேளையில் அது பயனுள்ளது என்பது நடைமுறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் சாவ் லீச்சியன் கூறினார்.