பாகிஸ்தான் தலைமை அமைச்சராக பதவி ஏற்ற ஷாபாஸ் ஷெரீஃப்
2022-04-12 18:48:25

ஷாபாஸ் ஷெரீஃப் பாகிஸ்தான் தலைமை அமைச்சராக 11ஆம் நாள் பதவி ஏற்றார்.

பதவி ஏற்பு விழா, 11ஆம் நாளிரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபதில் நடைபெற்றது. உடல் நிலை சரியில்லாத காரணத்தால், அரசுத் தலைவர் அல்வே இவ்விழாவில் கலந்துகொள்ளவில்லை.

பாகிஸ்தான் தேசிய பேரவையில் நடைபெற்ற தலைமை அமைச்சர் தேர்தலில், முஸ்லிம் லீகின் ஷெரீஃப் பிரிவின் தலைவர் ஷாபாஸ் ஷெரீஃப் 174 வாக்குகளைப் பெற்று தலைமை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.