சீனாவின் நடைமுறைக்கு ஏற்ற சமரசம் இல்லா கொள்கை
2022-04-12 17:18:31

சீன அரசவையின் கூட்டு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இயங்குமுறை 12ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்புக்கான சீன மையத்தின் முதன்மை கொள்ளை நோயியல் நிபுணர் வூ ச்சுன்யோ கூறுகையில், கோவிட்-19 நோய்க்கு எதிரான சீனாவின் பொது கோட்பாடு, சமரசம் இல்லா கொள்கை ஆகும். பொது மக்களின் உடல் நலம் மற்றும் உயிர் பாதுகாப்பை இயன்ற அளவில் பேணிக்காப்பது இதன் நோக்கமாகும் என்று தெரிவித்தார்.

தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் முன், இயல்பியல் தடுப்பு நோய்க்கு எதிரான முக்கியமான நடவடிக்கை ஆகும். ஆனால் இத்தகைய நடவடிக்கைக்கு வலுவான ஒருங்கிணைப்பும் பொது மக்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவும் தேவை. இதர நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இதன் மூலம் கோவிட்-19 நோய் பாதிப்பை ஒழிப்பது கடினம். வைரஸுடன் சமரசம் என்பது, அவற்றின் வேறு வழி இல்லாத தேர்வு. இருப்பினும், சமரசம் இல்லாத நிலையில் கோவிட்-19 பாதிப்பை ஒழிக்கும் கொள்கை, சீனாவின் நடைமுறைக்குப் பொருந்தியதோடு, தற்போதைய தலைசிறந்த தேர்வாகும் என்பது சீனாவின் நோய் தொற்று தடுப்பு அனுபவங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.