கோவிட்-19 நோய் தொற்று மற்றும் தடுப்பூசி விவகாரம் பற்றி சீனாவின் வேண்டுகோள்
2022-04-12 18:35:03

கோவிட்-19 நோய் தொற்று மற்றும் தடுப்பூசி விவகாரம் பற்றி ஐ.நா. பாதுகாப்பவை 11ஆம் நாள் நடத்திய வெளிப்படை கூட்டத்தில் ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சாங் ஜுன் உரை நிகழ்த்தியபோது, உண்மையான பலதரப்புவாதத்தை செயல்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தற்போதைய முனைப்பான பிரச்சினைகள் குறித்து அவர் ஆலோசனைகளை வழங்கினார். முதலாவதாக, தடுப்பூசி உதவி மற்றும் வினியோகத்தை அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றல் உருவாக்கத்தை முன்னேற்ற வேண்டும். இரண்டாவதாக, வளரும் நாடுகளின் பொது சுகாதார முறைமையின் கட்டுமானத்தை வலுப்படுத்த வேண்டும். மூன்றாவதாக, நோய் தொற்று பரவலுக்குப் பிந்தைய மீட்சிக்கும், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கும் புதிய இயக்காற்றலை ஊட்ட வேண்டும். நான்காவதாக, உண்மையான பலதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.