சீனாவுடனான உறவுக்கு பாகிஸ்தான் புதிய அரசு முக்கியத்துவம் அளிக்கும்
2022-04-13 18:52:06

பாகிஸ்தானின் புதிய தலைமையமைச்சர் முஹம்மது ஷாபாஸ் ஷெரீப் பிப்ரவரி 12ஆம் நாள் கூறுகையில், சீனாவுடனான உறவுக்கு பாகிஸ்தானின் புதிய அரசு பெரும் முக்கியத்துவம் அளிக்கிறது. வேளாண்மை, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், கல்வி, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதையின் கட்டுமானத்தை மேலும் பயன்தரும் முறையில் முன்னேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கான சீனத் தற்காலிக தூதர் பாங் ச்சுன்சுயெ கூறுகையில், பாகிஸ்தான் புதிய அரசுடன் நெருக்கமாக ஒத்துழைப்பு மேற்கொண்டு, நெடுநோக்கு தொடர்பை வலுப்படுத்தி, புதிய காலத்தில் மேலும் நெருங்கிய சீன-பாகிஸ்தான் பொது சமூகத்தை உருவாக்க சீனா எதிர்பார்க்கிறது என்றார்.