ரஷியா-பெலாரஸ் இடையே ஒருமைப்பாட்டுப் போக்கை வலுப்படுத்த வேண்டும்: புதின்
2022-04-13 17:15:10

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமீர் புதின் 12ஆம் நாள் அந்நாட்டின் தூரக் கிழக்கு பகுதியிலுள்ள வோஸ்டோச்னி விண்கலன் ஏவு தளத்தில் பெலாரஸ் அரசுத் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுடன் இணைந்து செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், மேலை நாடுகளின் தடைகளுக்கு எதிராக ரஷியாவும் பெலாரஸும் ஒருமைப்பாட்டுப் போக்கினை வலுப்படுத்தும் என்று தெரிவித்தார். அதோடு, உக்ரைனுடன் ரஷியா மேலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உகந்து மேடையாக பெலாரஸ் திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.