போர்த்துகலில் சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி பற்றிய பரப்புரை
2022-04-13 17:12:34

போர்த்துகலில் 5ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி பற்றிய இணையவழி பரப்புரை கூட்டம் 12ஆம் நாள் வெற்றிகரமாக நடைபெற்றது. அந்நாட்டின் தொழிற்துறை, வணிகத் துறை மற்றும் தொழில் நிறுவனங்களின் 70 பிரமுகர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சீனாவுக்கான போர்த்துகீசிய தூதர் ஜோஸ் அவ்குஸ்டொ டுவார்டே(Jose Augusto Duarte) உரை நிகழ்த்துகையில், இருநாட்டு அரசுகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் கூட்டு முயற்சியுடன் இருதரப்பு நட்புறவுக்கு இசைவான வர்த்தகத்தை முன்னேற்றி, சீனாவுக்கான போர்த்துகலின் இறக்குமதியை மேலும் விரிவாக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

போர்த்துகலுக்கான சீனத் தூதர் சாவ் பென்டாங் கூறுகையில், கோவிட்-19 நோய் தொற்று பாதிப்பு இருந்தாலும், இருநாட்டு வர்த்தகம் வளர்ச்சி அடைந்து, பெரும் உள்ளார்ந்த ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.