தைவான் பயணத்தை பெலோசி ரத்து செய்ய வேண்டும்:சீனா
2022-04-13 17:09:47

 

சீன அரசவையின் தைவான் விவகார அலுவலகம் 13ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் செய்தித் தொடர்பாளர் மா சியாவ்குவாங் கூறுகையில், இருகரைகளின் சக நாட்டவர்கள் கூட்டு முயற்சியுடன் தைவான் சுதந்திர சக்தியைத் தடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததோடு, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை தலைவர் பெலோசி தைவானில் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

ஒரே சீனா என்ற கொள்கையையும் சீனா-அமெரிக்கா இடையேயான 3 கூட்டறிக்கைகளின் விதிகளையும் அமெரிக்கா நடைமுறையில் பின்பற்றி, தைவான் விவகாரத்தில் சீனாவுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி, தைவானைப் பயன்படுத்தி சீனாவைத் தடுக்கும் செயலை நிறுத்த வேண்டும். சீனாவின் அரசுரிமை மற்றும் உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டுக்குத் தீங்குவிளைவிக்கும் செயலுக்கு சீனா உறுதியுடன் பதிலடி கொடுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சுதந்திரத்தைப் பெறுவதற்காக வெளிப்புறச் சக்தியுடன் சதி செய்து ஆத்திரமூட்டும் செயலை உடனே நிறுத்துமாறு தைவானின் ஜனநாயக முன்னேற்றக் கட்சிக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.