சீனாவின் மனித உரிமை நிலைமையை இழிவுபடுத்த முடியாத அமெரிக்கா
2022-04-13 18:44:15

2021ஆம் ஆண்டிற்கான பல்வேறு நாடுகளின் மனித உரிமைகள் பற்றிய அறிக்கையை அமெரிக்கா 12ஆம் நாள் வெளியிட்டது. இதில், சீனாவின் அரசியல் அமைப்புமுறை பற்றியும் மனித உரிமைகளின் நிலைமை குறித்தும் அமெரிக்கா குறைகூறியுள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லிஜியன் 13ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், அமெரிக்காவின் இந்த அறிக்கையில் சீனா தொடர்பான அம்சங்களும், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் தெரிவித்த கருத்துக்களும் உண்மையைப் பொருட்படுத்தாமல், சரி மற்றும் தவற்றைக் குழப்பமாக்கியுள்ளன. அரசியல் பொய்கள் மற்றும் சித்தாந்த பாரபட்சம் நிறைந்திருக்கும் இவற்றுக்கு சீனா மனநிறைவின்மையையும் உறுதியான எதிர்ப்பையும் தெரிவிக்கிறது என்று தெரிவித்தார்.

அமெரிக்கா ஆண்டுக்கு ஆண்டு மனித உரிமைகள் பற்றிய அறிக்கையை வெளியிட்டு, சீனா மீது அவதூறு பரப்புவதோடு, உலகின் பல நாடுகள் மற்றும் பிரதேசங்கள் பற்றி குறைகூறி வருகிறது. மனித உரிமைகளுக்கான நீதிபதி மற்றும் முன்மாதிரியாக தன்னை உருவாக்க முயலும் அமெரிக்காவின் இச்செயல், அதன் போலித்தனம் மற்றும் இரட்டை வரையறையை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.