போயிங் 737 MAX ரக விமானத்தை ஓட்டும் தகுநிலையை இழந்த 90 இந்திய விமானிகள்
2022-04-14 17:15:40

இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தைச் சேர்ந்த 90 விமானிகள் வரையறைகளின்படி போயிங் 737 MAX ரக விமானத்தை ஓட்டும் பயிற்சியை மேற்கொள்ளாத காரணத்தினால், அவர்களின் இத்தகைய விமானத்தை ஓட்டும் தகுநிலை நீக்கப்பட்டுள்ளது என்று இந்திய பயணியர் விமான நிறுவனம் ஏப்ரல் 13ஆம் நாள் அறிவித்தது.

இந்த விமானிகள் மீண்டும் பயிற்சி பெற வேண்டும். மேலும், இச்சம்பவத்தில் பொறுப்பேற்கவில்லாத பணியாளர்களுக்குக் கடும் தண்டனை விதிக்கப்படும் என்றும் இந்திய பயணியர் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.