மனித உயிர்களின் கவனம் செலுத்தாத அமெரிக்கா
2022-04-14 18:40:41

மார்ச் திங்களில், அமெரிக்கா உக்ரைனிலிருந்து வந்த 12 அகதிகளை மட்டும் ஏற்றுக்கொண்டது. இதன் காரணம் என்ன என்ற கேள்வியை பிரிட்டன் ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் 12ஆம் நாள் பைடன் அரசிடம் எழுப்பியது.

ரஷிய-உக்ரைன் மோதல் நிகழ்ந்த பிறகு, 46 இலட்சத்து 50 ஆயிரம் உக்ரைன் மக்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்றுள்ளனர் என்று அதே நாள் அகதிகளுக்கான  ஐ.நா உயர் ஆணையர் பணியகம் தெரிவித்தது.

பல பத்து இலட்சம் உக்ரைன் அகதிகள், அமெரிக்க மேலாதிக்கத்தினால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களாவர். 2ஆது உலக போருக்குப் பிறகு, பல போர்களை அமெரிக்கா நடத்தியுள்ளது. இவற்றில் நிறைய பொது மக்கள் உயிரிழந்தது மட்டுமல்ல, கோடிக்கணக்கானோர் அகதிகளாகினர். இவை, தொடர்புடைய நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நிதானத்தின் மீது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.