2022 பிரிக்ஸ் நாடுகளின் ஒருங்கிணைப்பாளர்கள் 2ஆவது கூட்டம்
2022-04-14 09:20:27

2022ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் ஒருங்கிணைப்பாளர்களின் 2ஆவது கூட்டம் ஏப்ரல் 12, 13ஆம் நாட்களில் காணொளி வழியாக நடைபெற்றது. பிரிக்ஸ் விவகாரத்துக்கான சீன ஒருங்கிணைப்பாளரும், துணனை வெளியுறவு அமைச்சருமான மா ச்சோஷூ, கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளரிடம் கூறுகையில், தற்காலத்தில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பின் முன்னேற்றங்கள் மற்றும் நிலைப்பாடு, உறுப்பு நாடுகளுக்கு மட்டுமல்ல, உலக அமைதி மற்றும் வளர்ச்சிப் போக்கிற்கும் ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

ஐந்து நாடுகள், பலதரப்புவாத வர்த்தக அமைப்பு முறை, உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தத்துக்கான கூட்டறிக்கை முதலியவை குறித்து விவாதித்து வருகின்றன. எண்ணியல் பொருளாதாரம், தொழில் மற்றும் விநியோகச் சங்கிலி, தொடரவல்ல வளர்ச்சி உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்பு தொடர்பாக, பிரிக்ஸ் நாடுகள் முக்கிய ஒத்த கருத்துகளை எட்டியுள்ளன என்றும் மா ச்சோஷூ குறிப்பிட்டுள்ளார்.