ஹைனான் தடையில்லா வர்த்தக துறைமுகத்தில் சீனாவின் திறந்த நிலை
2022-04-14 16:04:55

சீனாவில் திறந்த கதவு ஒருபோதும் மூடாது. திறப்பு நிலை மென்மேலும் மேலும் விரிவாக்கும் என்பது சீனா உலகத்துக்கு அளித்த வாக்குறுதி. கடந்த 4 ஆண்டுகளில் ஹைனான் தடையில்லா வர்த்தக துறைமுகக் கட்டுமானத்தில், சீனா வாக்குறுதியை நிறைவேற்றி, சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கிறது.

தடையில்லா வர்த்தக துறைமுகமானது, தற்போதைய உலகளவில் மிக உயர் நிலையிலான திறப்புக் கொள்கையாகும். தற்போது, ஹைனான் தீவு முழுவதும் தடையில்லா வர்த்தகத்துக்கான ஆயத்தப் பணி பன்முகங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. தடையில்லா வர்த்தக துறைமுகக் கட்டுமானம் விரைவாக நடந்து கொண்டிருக்கிறது.  துபாய் போன்ற நகரமாக ஹைனான் மாறும் என்றும் உலகத்துக்கு பகிரக் கூடிய வாய்ப்புகளை கொண்டு வரும் என்றும் பல வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் கருதுகின்றன.

உண்மையில், கடந்த 4ஆண்டுகளில், ஹைனான் தடையில்லா வர்த்தக துறைமுகக் கட்டுமானத்தில் உலகம் நன்மைப்பெற்றுள்ளது. சுங்க வரியற்ற கொள்கையில் இருந்து, பல தொழில்நிறுவங்கள் பயன் பெற்றுள்ளன. ஹைனான் முதல் முழு சீனா வரையிலும், புதிய சுற்று உயர் நிலையான திறப்புக்கொள்கையால், சீனாஉலகத்திற்கு மேலதிக வாய்ப்புகளை கொண்டு வரும் என எதிர்பார்க்கத்தக்கது.