உணவு பாதுகாப்பு குறித்து 4 சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள்
2022-04-14 16:01:41

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஐ.நாவின் உலக உணவு திட்ட அலுவலகம், உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் 13ஆம் நாள் வெளியிட்ட கூட்டறிக்கையில், உணவு விலை உயர்வு, வினியோக பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளைச் சமாளிக்கும் விதம், பல்வேறு தரப்புகளும் அவசர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தீவிரமாகி வரும் நெருக்கடிகள் முழு உலகையும் உலுக்கி வருகின்றன. கோவிட்-19 நோய் தொற்று பரவி வரும் 3ஆவது ஆண்டில், உலகச் சூழ்நிலை ரஷிய-உக்ரைன் இடையேயான மோதலால் மோசமாகி வருகிறது. காலநிலை மாற்றம் உள்பட பிரச்சினைகள், உலக மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்வதேச சமூகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அவசர உணவு வினியோகம் மற்றும் நிதியுதவி அளித்து, வேளாண் உற்பத்தியை விரிவாக்குவதோடு, வர்த்தகத்தையும் திறந்து வைத்து, பலவீனமான நாடுகளுக்கு அவசர ஆதரவை வழங்க வேண்டும் என்றும் இவ்வறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.