கோவிட்-19 நோய் பரவல் தொடர்ந்து கவனிக்கத்தக்க சுகாதார சம்பவம்
2022-04-14 16:32:29

உலகளவில் கோவிட்-19 நோயால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அண்மையில் குறைந்து வருகிறது. இருப்பினும், கோவிட்-19 நோய் தொற்று பரவல், இன்னும் சர்வதேச அளவில் கவனிக்கத்தக்க பொது சுகாதாரச் சம்பவமாகும் என்று உலக சுகாதார அமைப்பு 13ஆம் நாள் தெரிவித்ததோடு, இதனைச் சமாளிக்க, பல்வேறு நாடுகள் எப்போதுமே தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் முன்மொழிவு அளித்தது.

கடந்த 4 முதல் 10ஆம் நாள் வரை, உலகளவில் புதிய கோவிட்-19 நோயாளிகள் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து 3ஆவது வாரமாக குறைந்துள்ளது. 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் உலக சுகாதார அமைப்புக்கு அறிவிக்கப்பட்டன. இவ்விரு எண்ணிக்கைகள் முந்தைய வாரத்தில் இருந்ததை விட முறையே 24 வழுக்காடும் 18 விழுக்காடும் குறைந்துள்ளன.

இருப்பினும், சில நாடுகளில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டது. இது மருத்துவமனைக்கு அழுத்தம் கொண்டு வந்தது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் எச்சரித்தார்.