மனித உரிமையை ஆயுதமாக்கிய அமெரிக்கா
2022-04-15 15:16:51

அமெரிக்காவைப் பொறுத்தவரை, ஏப்ரல் 12ஆம் நாள் ஒரு வருத்தமான நாளாகும். அன்று காலை நியூயார்க்கில் சுரங்க இருப்புப்பாதையின் புரூக்ளின் நிலையத்தில் 28வயதான கர்ப்பிணி பெண், 12வயதான குழந்தை மற்றும 20க்கும் அதிகமான பயணிகள் துப்பாக்கியால் சுட்டப்பட்டனர்.

அதே வேளை, 2021 உலக நாடுகளின் மனித உரிமை நிலைமை பற்றிய அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அதில் சுமார் 200 நாடுகளின் மனித உரிமை பற்றி அமெரிக்கா மதிப்பிட்டதோடு, சொந்த நாட்டின் மனித உரிமை நிலைமை பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை.

துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்ட அதன் மக்களின்  துன்பத்தைப் பொருட்படுத்தாமல், ஆண்டுதோறும் பிற நாடுகளின் மனித உரிமை பற்றிய அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா, பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு அதன் மேலாதிக்கத்தைப் பேணிக்காத்து வருகிறது. வாஷிங்டன் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, மனித உரிமை என்பது அரசியல், கருவி மற்றும் ஆயுதமாக விளங்குகின்றது.

அமெரிக்காவின் இச்செயல் உலகளவில் கோப்பத்தை எழுப்பியுள்ளது. உள்நாட்டில் நிலவிய பல பிரச்சினைகள் மற்றும் இரட்டை நிலைப்பாடு எடுத்து பிற நாடுகளின் மனித உரிமையை குற்றஞ்சாட்டிய அமெரிக்காவின் செயல் மக்களை எரிச்சலூட்டியுள்ளது என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 13ஆம் நாள் அறிவித்தது.

மனித உரிமையை ஆயுதமாக்கிய அமெரிக்கா தான் முழு உலகமும் எதிர்நோக்கும் உண்மையான அச்சுறுத்தலாகும்.