ஆசிய அமெரிக்கரின் மீது மனித உரிமை அத்துமீறல்
2022-04-15 17:14:15

அமெரிக்காவின் இனவெறி சாராம்சத்தை நிரூபித்துள்ள ஆசிய வம்சாவழியைச் சேர்ந்தவருக்கு எதிரான பாகுபாடு என்ற தலைப்பிலான ஆய்வு அறிக்கையை சீன மனித உரிமை ஆய்வு சங்கம் 15ஆம் நாள் வெளியிட்டது. ஆசிய அமெரிக்கர்கள், ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க வம்சாவழியினரையும் ஆதிகுடிக்களையும் போன்று, மனித உரிமைகளைப் பெற்று நனவாக்குவது உள்ளிட்ட பல துறைகளில் பாகுபாடு செய்யப்பட்டு அத்துமீறலுக்குள் ஆக்கப்பட்டுள்ளனர் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முற்காலத்திலிருந்து தற்போது வரை தொடரும் ஆசிய அமெரிக்கர்கள் மீதான இனவெறி பாகுபாடு பற்றி இவ்வறிக்கையில் விளக்கிக் கூறப்பட்டதோடு, கோவிட்-19 நோய் தொற்று பரவலில் அமெரிக்க அரசியல்வாதிகளின் இனவெறிசார் கட்டுப்பாடு, அமெரிக்காவில் வெள்ளையர் மேலாதிக்கத்தால் உருவாகியுள்ள இன அமைப்பு மற்றும் சமூகச் சூழ்நிலை உள்ளிட்டவை, ஆசிய வம்சாவழியினருக்கு எதிரான கடும் பாகுபாட்டிற்கான காரணங்களும் வெளிக்காட்டப்பட்டுள்ளன.

சீனாவுக்கு எதிரான அமெரிக்க அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில், சீன வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் மீதான இனவெறி தாக்குதல் தீவிரமாக கூடும். இது குறித்து விழிப்புடன் இருக்கவும், சர்வதேச சமூகம் இதில் தொடர்ந்து கவனம் செலுத்தவும் வேண்டும் என்றும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.