131ஆவது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருட்காட்சி துவக்கம்
2022-04-15 17:21:45

131ஆவது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருட்காட்சி 15ஆம் நாள் இணையவழியாகத் தொடங்கியுள்ளது. 10 நாட்களாக நடைபெறும் இப்பொருட்காட்சி, 25.5 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்த்துள்ளது. 220 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் கொள்வனவு வணிகர்கள் இணைய வழியாக இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டு, தொழில் சங்கிலி மற்றும் வர்த்தகத்தின் நிலைத்தன்மைக்கு ஆதரவளிப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச இரட்டை சுழற்சிகளை இணைப்பது என்ற தலைப்பிலான நடப்பு பொருட்காட்சியில், 16 வகைகளிலான வணிகப் பொருட்களுக்கு 50 காட்சியிடங்கள் அமைக்கப்பட்டு, 29 லட்சத்துக்கும் அதிகமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய பொருட்களும், 4.8 லட்சத்துக்கும் மேற்பட்ட கரி குறைந்த பசுமையான பொருட்களும் வரலாற்றில் புதிய பதிவாகியுள்ளன என்று தெரிய வந்துள்ளது.