அமெரிக்கா-தைவான் அதிகாரப்பூர்வ தொடர்பை உறுதியாக எதிர்க்கும் சீனா
2022-04-15 15:17:27

அமெரிக்கா-தைவான் இடையே எந்த விதமான அதிகாரப்பூர்வ தொடர்புக்கும் சீனா உறுதியாக எதிர்க்கிறது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் 14ஆம் நாள் தைவானில் பயணம் மேற்கொள்வது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லீச்சியென் அன்று இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், அமெரிக்க அரசு பின்பற்றிய ஒரே சீனா என்ற கொள்கையை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும் கடைப்பிடக்க வேண்டும். தைவானுடனான அதிகாரப்பூர்வ தொடர்பை அமெரிக்கா நிறுத்த வேண்டும். நாட்டின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேசத்தின் ஒருமைப்பாட்டை உறுதியாகப் பேணிக்காக்கும் விதம், சீனா வலுவான நடவடிக்கையை மேற்கொள்வதாக சாவ் லீச்சியென் குறிப்பிட்டார்.