போலித்தனமான அமெரிக்காவுக்கு சீனாவின் எதிர்ப்பு
2022-04-15 19:01:54

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் தைவானுக்குப் பயணம் செய்தது குறித்து சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வூ ஜியன் 15ஆம் நாள் உரை நிகழ்த்தினார். அமெரிக்க தரப்பின் இச்செயல், தைவான் சுதந்திரச் சக்திக்கு வெளிக்காட்டிய தவறான சமிக்கை ஆகும். இது மிகவும் பாசாங்குத்தனமாகவும் நம்பிக்கைக்கு துரோகமாகவும் உள்ளது. வெளிப்புற சக்தியின் தலையீடு மற்றும் தைவான் சுதந்திரச் சக்தியின் பிளவு முயற்சியைத் தோற்கடிக்க, சீன மக்கள் விடுதலை படை  அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

தைவான் சீனாவிலிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். தைவான் தீவின் அருகில் சீன மக்கள் விடுதலை படையின் கிழக்கு மண்டல ஆணையகம் அண்மையில் மேற்கொண்ட சுற்றுக் கண்காணிப்பு மற்றும் பயிற்சி, தற்போதைய நிலைமைக்கிணங்க, நாட்டின் அரசுரிமையைப் பேணிக்காக்கும் இன்றியமையாத நடவடிக்கையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.