சீன-மோரிஷ்ஸ் தூதாண்மையுறவின் 50ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்
2022-04-15 17:30:15

ஏப்ரல் 15ஆம் நாள் சீன-மோரிஷ்ஸ் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவாகும். இதைக் கொண்டாடும் விதம், சீன ஊடகக் குழுமத்தின் சி ஜி டி என் தொலைகாட்சி நிலையத்தின் பிரான்ஸ் பிரிவும் மோரிஷ்ஸ் தேசிய தொலைக்காட்சி நிலையமும், 50 ஆண்டுகளைக் கடந்த பசுமையான தூதாண்மையுறவு என்ற தலைப்பில் கூட்டாக நடத்திய பல்லூடக நடவடிக்கை இரு நாடுகளிலும் இணைய வழியாக நடைபெற்றது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைமை இயக்குநருமான ஷேன் ஹெய் சியுங்கும், மோரிஷ்ஸ் வெளியுறவு அமைச்சர் எலன் கானுவும் காணொளி வழியாக உரை நிகழ்த்தினர்.

இரு நாடுகளின் தூதர்கள் அன்று நடைபெற்ற இளைஞர் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.