அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தி வரும் இனவெறி
2022-04-15 20:29:15

அமெரிக்காவில் அனைவரும் சமம் என்பதை அந்நாடு கூறி வருகிறது. ஆனால் பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆமி வாக்ஸ் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபேறியவர்கள் மீது பழிதூற்று பரப்பினார். இனவெறியைப் பரப்பிய துணிச்சல் அவருக்கு எப்படி கிடைத்தது என்ற கேள்விக்கு, அமெரிக்காவின் இனவெறி சாராம்சத்தை நிரூபித்துள்ள ஆசிய வம்சாவழியைச் சேர்ந்தவருக்கு எதிரான பாகுபாடு என்ற தலைப்பில் சீன மனித உரிமை ஆய்வு சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. தோல் நிறம், அமெரிக்கரின் தலைவிதிக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது. இது அமெரிக்க சமூகத்தின் இரும்பு போன்ற விதிமுறை என்று இவ்வறிக்கையின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஆசிய நாட்டவர்கள் அமெரிக்காவுக்குக் குடியேறத் தொடங்கினர். அவர்கள் அந்நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளனர். ஆனால் பல்வேறு வரலாற்றுக் கட்டங்களிலும், ஆசிய அமெரிக்கர்கள், பாகுபாடு, பகைமை, இனவெறி வன்முறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏபி செய்தி நிறுவனம் வழங்கிய விமர்சனத்தைப் போல், ஆசிய அமெரிக்கர்கள் மீதான இனவெறி, அமெரிக்க வரலாற்றில் வெட்கக்கேடான செயலாகும்.