ஜனநாயகத்துடன் தொடர்புடையது தேசியப் பாதுகாப்பு – பாக். ராணுவம்
2022-04-16 16:52:11

பாகிஸ்தானின் தேசியப் பாதுகாப்பு என்பது நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புடையது என்றும் இவைதான் பொருளாதாரம் உள்ளிட்ட வளர்ச்சிக் காரணிகளை முன்னெடுத்துச் செல்கின்றன என்றும் அந்நாட்டு ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ராணுவ உயர் அதிகாரி பாபர் இஃப்திகார் கூறுகையில், நாடாளுமனம், உச்சநீதிமன்றம், ராணுவம் ஆகியவை ஜனநாயக ஆற்றலாகும். பாகிஸ்தானின் நிலைத்தன்மை என்பது ஜனநாயகத்தைச் சார்ந்துள்ளது. எனவே, நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது ஒவ்வொருவரின் கடமை என்று குறிப்பிட்டார்.

ஜனநாயகம் மட்டுமே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் என்பதால், பாகிஸ்தானில் மீண்டும் ஒரு ராணுவ ஆட்சி வராது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.