சீன விண்வெளி நிலையம் - மனிதகுல விண்வெளி ஆராய்ச்சியின் புதிய தொடக்கம்
2022-04-16 20:19:26

3 விண்வெளி வீரர்களுடன் சீனாவின் ஷென்சோ-13 விண்கலம், விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டு 16ஆம் நாள் காலை 9:56 மணி அளவில் வெற்றிகரமாகத் தரை இறங்கியது.

ஷென்சோ-12 விண்கலம் பூமிக்குத் திரும்பிய போது, பூமியை 11 முறை சுற்றியதுடன் ஒரு நாளுக்கு மேல் பறந்து தரையிறங்கியது. ஆனால், ஷென்சோ-13 விண்கலம், பூமியை ஐந்து முறை மட்டுமே சுற்றி, ஒன்பது மணி நேரங்களிலேயே புவியை அடைந்து விட்டது. தொழில்நுட்பப் புத்தாக்கத்தின் அதிவேக வளர்ச்சியையே இது காட்டுகிறது.

60 முதல் 180 டன் எடையுள்ள ஒரு பெரிய நிரந்தர விண்வெளி நிலையத்தைக் கட்டியமைப்பது சீனாவின் தற்போதைய இலக்காகும். சீன விண்வெளி நிலையம், வரலாற்றில் முதன்முறையாக ஐநாவின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் திறக்கப்படும். தற்போது வரை, 17 நாடுகள் மற்றும் 23 நிறுவனங்களைச் சேர்ந்த 9 திட்டங்கள், சீன விண்வெளி நிலைய அறிவியல் பரிசோதனைப் பட்டியலின் முதல் தொகுதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இது, முக்கிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளைச் சீனர்கள் பெறுவதுடன், விண்வெளியை ஆராய்வதற்கான மனிதகுல ஒத்துழைப்பின்  புதிய கட்டத்தின் தொடக்கமாகவும் திகழ்கிறது.