மனித உரிமை பாதுகாவலரின் புகழ் போய் விட்டது
2022-04-16 17:30:12

ஜான் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுங்களின்படி, மார்ச் 31ஆம் நாள் வரை, அமெரிக்காவில் 8 கோடிக்கும் மேலானோர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டனர். 9.7 இலட்சம் பேர் இதனால் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. உலகளவில் மிக முன்னேறிய மருத்துவ வசதிகள் மற்றும் தொழில் நுட்பங்களைக் கொண்ட அமெரிக்காவில், மிக அதிகமான தொற்று மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது, ஆச்சரியமாக உள்ளது.

டெக்சாஸ் மாநிலத்தின் துணை ஆளுநர் டென் பாட்ரிக் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில், முதியோர்கள், அமெரிக்காவுக்கு உயிர் பலி கொடுக்கலாம். நாட்டின் பொருளாதாரம், முதியோர்களின் உயிரை விட முக்கியமானது என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.

மனித உரிமை, மேலை நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, உலகத்துக்குத் தலைமை தாங்கும் வசதி மற்றும் சாக்குப்போக்கு என்று பீட்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தின் சட்டவியல் பேராசிரியர் டேனில் தெரிவித்தார்.