வாகனங்களின் விலையை உயர்த்திய மஹேந்திரா
2022-04-16 16:55:05

வாகனங்களின் விலையை 2.5 விழுக்காடு வரை உயர்த்துவதாக இந்தியாவின் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான மஹேந்திர குழுமம் மும்பை பங்கு மாற்று நிலையத்தில் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, வெவ்வேறு ரக வாகனங்களின் விலை 10 ஆயிரம் முதல் 63 ஆயிரம் ரூபாய் வரை உயரும்.

இரும்பு, அலுமினியம், பல்லாடிம் உள்ளிட்ட வாகனத் தயாரிப்புக்குத் தேவைப்படும் முக்கியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால் வாகனங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று அக்குழும்ம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் மாருதி சுசிகி நிறுவனமும், வாகனங்களின் விலையை உயர்த்தும் அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், எவ்வளவு உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை.