இலங்கையில் எரிபொருள் பங்கீடு அறிமுகம்
2022-04-16 16:53:48

இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலுக்கு மத்தியில், எரிபொருள் நிலையங்களில் வாகனங்களுக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என்றும் இந்த உத்தரவு வெள்ளிக்கிழமை மதியம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

ஒருமுறை எரிபொருள் நிரப்பும்போது இரு சக்கர வாகனத்துக்கு 1,000 இலங்கை-ரூபாய் மதிப்பிலான எரிபொருளும், மூன்று சக்கர வாகனங்களுக்கு 1,500 ரூபாய் மதிப்பிலான எரிபொருளும், கார், வேன் மற்றும் ஜீப் ஆகியவற்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் மதிப்பு எரிபொருளும் வழங்கப்படும்.

இந்த வரையறை, பேருந்துகள், லாரிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்குப் பொருந்தாது என்று சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தலைவர் சுமித் விஜிசிங்கே தெரிவித்தார்.