மனிதரை ஏற்றிச் சென்ற ஷென்சோ-13 விண்கலம்
2022-04-16 16:51:03

பெய்ஜிங் நேரப்படி ஏப்ரல் 16ஆம் நாள் 9:56 மணிக்கு, மனிதரை ஏற்றிச்செல்லும் ஷென்சோ-13 விண்கலம், விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக டொங்ஃபெங் தரையிறங்கு தளத்தை அடைந்தது என்று விண்வெளிப் பொறியியல் பணியகம் தெரிவித்தது.

இந்த விண்வெளிப் பயணம் முழுமையாக வெற்றி பெற்றுள்ளது. விண்வெளி நிலையத்தின் முக்கிய தொழில்நுட்ப கண்காணிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளதை இது காட்டுகின்றது. மேலும் சீன விண்வெளி நிலையம் கட்டுமான கட்டத்தில் நுழைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

சாய் ச்சிகாங், வாங் யாபிங், யேஃபுகுவான் ஆகிய 3 விண்வெளி வீர்ர்கள் 2021ஆம் ஆண்டு ஆக்டோபர் 16ஆம் நாள் சியூ சுவான் செயற்கை கோள் ஏவு மையத்திலிருந்து புறப்பட்டு, விண்வெளியிலுள்ள தியேன்ஹே மையத்தில் 6 திங்கள் தங்கியிருந்தனர். சீன விண்வெளி வீர்ர்கள் சுற்றுவட்டப் பாதையில் பயணிக்கும் மிக நீண்டகால பதிவை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.