இலங்கையில் பங்குச் சந்தை மூடல்
2022-04-17 16:43:45

இலங்கையில் பங்குகளின் விலை தொடர்ச்சியாக சரிந்து வந்ததால் ஏப்ரல் 18 முதல் 5 நாள்களுக்கு கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக மூடப்படும் என்ற உத்தரவை அந்நாட்டு பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை  ஆணையம் சனிக்கிழமை பிறப்பித்தது.

நாட்டில் நிலவும் மோசமான பொருளாதாரச் சூழல் காரணமாக, பங்குச் சந்தையை தற்காலிகமாக மூடுமாறு இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தணை ஆணையத்திடம் கொழும்பு பங்குச் சந்தையின் இயக்குநர்கள் குழு கோரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து பங்குச் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. பங்குச் சந்தையுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினரும் இதே கோரிக்கையை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பங்குதாரர்கள் மற்றும் பங்குச் சந்தை பிரதிநிதிகள் ஆகியோரின் நலன் கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இவ்வாணயைம் தெரிவித்துள்ளது.