இந்தியாவில் போரிஸ் ஜான்சன் பயணம்
2022-04-17 15:54:37

பிரிட்டன் தலைமையமைச்சர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய நாள்களில் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

21ஆம் நாள் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது, இந்தியா மற்றும் பிரிட்டனின் முக்கிய தொழிற்துறைகளுக்கான ஒத்துழைப்பு திட்டங்களிலான முதலீடுகளை அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தில்லியில் 22ஆம் நாள் பயணம் மேற்கொண்டு தலைமையமைச்சர் நரேந்திர மோடியைச் சந்திக்க உள்ளார். இச்சந்திப்பில் பாதுகாப்பு மற்றும் வர்த்தகத் துறைகள் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரிஸ் ஜான்சன் இந்தியாவில் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. இப்பயணத்தில் இரு நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவது, பொருளாதார வளர்ச்சி, எரியாற்றல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை முக்கியத்துவம் வழங்கப்படும் என்று ஜான்சன் தெரிவித்தார்.