மதுரை சித்திரை திருவிழா கூட்டநெரிசல் – இருவர் சாவு
2022-04-17 16:44:31

மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற சித்திரை திருவிழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்தனர், 8 பேர் காயமடைந்தனர். சனிக்கிழமை காலை அழகர் ஆற்றில் இறங்குவதைப் பார்க்க கூட்டத்தின் ஒரு பகுதியினர் முந்திச் சென்றபோது நெரிசல் ஏற்பட்டதாக மதுரை ஆட்சியர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

கடந்த இரு ஆண்டுகளாக கொவைட்-19 பரவல் காரணமாக திருவிழாவில் மக்கள் பங்கேற்க முடியவில்லை. இதனால், இவ்வாண்டு திருவிழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர் என்று உள்ளூர்மக்கள் தெரிவித்தனர்.