6 மாதங்களுக்குப் பின் பூமிக்குத் திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்
2022-04-17 16:25:46

சீனா கட்டமைத்து வரும் தியன் கொங் என்ற புதிய விண்வெளி நிலையத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்த 3 சீன விண்வெளி வீரர்கள் ஏப்ரல் 16ஆம் நாள் 9:56 மணிக்கு, ஷென்சோ-13 விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்பினர்.

அவர்கள் இரு முறை விண்வெளியில் நடந்து, நிலையத்துக்கான தொகுதிகளைப் பொருத்தும் பணியில் ஈடுப்பட்டது, இரு முறை விண்வெளி வகுப்பில் பாடம் நடத்தியது உள்ளிட்ட பல கடமைகளை நிறைவேற்றியுள்ளனர். தற்போது, மூவரும் நல்ல உடல் நடத்துடன் இருப்பதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். சுற்றுவட்டப் பாதையில் மிக நீண்டகாலம் தங்கி, புதிய பதிவை அவர்கள் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.