2022இல் 6 விண்வெளிக் கடமைகள்:சீனா
2022-04-17 18:52:51

சுற்றுவட்டப் பாதையில் சீன விண்வெளி நிலையத்தின் கட்டுமானத்தை நிறைவேற்றும் வகையில், 2022ஆம் ஆண்டில் 6 விண்வெளிக் கடமைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி திட்டப்பணி அலுவலகத்தின் இயக்குநர் ஹௌ ச்சுன் 17ஆம் நாள் தெரிவித்தார்.

திட்டத்தின்படி, மே திங்கள் தியன் ச்சோ-4 என்ற சரக்கு விண்கலம் அனுப்பப்படும். ஜூன் திங்கள் 3 வீரர்களுடன் ஷன் ச்சோ-14 விண்கலம் அனுப்பப்படும். ஜுலை திங்கள் வென் தியன் என்னும் ஆய்வு கலம், சுற்றுவட்டப் பாதையிலுள்ள தியன் ஹே மையக் கலத்துடன் இணைக்கப்படும். அக்டோபர் திங்கள் மங் தியன் ஆய்வு கலம், மையக் கலத்துடன் இணைக்கப்பட்ட பின், 3 கலங்களுடனான சீன விண்வெளி நிலையம் உருவாக்கப்படும். அதனைத் தொடர்ந்து, தியன் ச்சோ-5 சரக்கு விண்கலம், 3 வீரர்களுடன் ஷன் ச்சோ-15 விண்கலம் ஆகியவை அனுப்பப்படவுள்ளன.