பாகிஸ்தான் வழியாக ஆப்கனுக்கு இந்தியா மனிதநேய உதவிகள்
2022-04-18 16:50:21

பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு மனிதநேய உதவி வழங்குவதற்கான காலவரம்பை நீட்டிக்குமாறு இந்தியா விடுத்த கோரிக்கைக்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆப்கனுக்கு தானியங்கள், மருந்துகள் உள்ளிட்ட மனிதநேய உதவிப் பொருள்களை பாகிஸ்தான் வழியாக அனுப்புவதற்கான காலவரம்பு மேலும் 2 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 50 ஆயிரம் டன் அளவிலான மனிதநேய உதவிப் பொருள்களை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் வழியாக அனுப்புவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான காலவரம்பு மார்ச் 21ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இக்காலவரம்பை நீட்டிக்குமாறு இந்தியா பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்திருந்தது.