சர்வதேச ஒழுங்கை சீர்கெடுத்த அமெரிக்கா
2022-04-18 19:40:54

மற்ற நாடுகளில் தனது சொந்த அரசியல் அமைப்பு மற்றும் கருத்துக்களைத் திணிக்கும் விதம் அமெரிக்கா அவற்றின் உள்விவகாரங்களில் தலையிட்டு வருகின்றது. இராணுவ ஆக்கிரமிப்பைத் தவிர, மற்ற நாடுகளில் கலவரத்தைத் தூண்டுவது அமெரிக்கா விரும்பும் செயலாகும். இவற்றில் ரஷிய-உக்ரைன் மோதல் ஒன்றாகும். இது மட்டுமல்லாமல், அமெரிக்கா நடத்தும் போரில் வர்த்தகப் போரும் அடங்கி உள்ளது.

புள்ளிவிவரங்களின் படி, அமெரிக்க நிதி அமைச்சகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 2000ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை 933 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் வெளிநாட்டுப் பொருளாதார மேலாதிக்கச் செயல்கள், சர்வதேசப் பொருளாதார ஒழுங்கை கடுமையாகப் பாதித்து, உலகப் பொருளாதார பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. மற்ற நாடுகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதும் பல்வேறு துறைகளில் அமெரிக்காவுக்கு முழுமையான நன்மைகள் கிடைப்பதும் அதன் நோக்கமாகும்.