இலங்கையில் 17 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
2022-04-18 16:51:29

இலங்கை அமைச்சரவையில் 17 புதிய அமைச்சர்கள் திங்கள்கிழமை பதவியேற்றனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அரசியல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர், ஒட்டுமொத்த அமைச்சர்களும் பதவியை ராஜிநாமா செய்தனர். பல்வேறு அரசியல் கட்சிகள் பல நாள்கள் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து தற்போது புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

அமைச்சரவையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இளம் உறுப்பினர்கள் இடம் பெற வேண்டுமென அரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்சே விரும்பினார். மின்சாரம் மற்றும் ஆற்றல், ஊடகம், சுகாதாரம், துறைமுகம் மற்றும் கப்பல் உள்ளிட்ட துறைகளுக்கு புதிய அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.