அரபு லீக்கிற்கு சீனா அளித்த உதவி பொருட்கள்
2022-04-18 11:12:11

எகிப்திலுள்ள சீன தூதரகம் 17ஆம் நாள் வெளியிட்ட தகவலின் படி, ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கோவிட் 19 நோய் தொற்றைக் கூட்டாக சமாளிக்கும் வகையில், மருத்துவ முக கவசம் உள்ளிட்ட நோய் தொற்று தடுப்பு பொருட்களை சீனா, அரபு லீக்கின் செயலாளரகம் நன்கொடையாக வழங்கியது. 14ஆம் நாள், அரபு லீக்கின் செயலாளரகம் இப்பொருட்களைப் பெற்றது.

எகிப்துக்கான சீனத் தூதரும், அரபு லீக்கிற்கான சீனாவின் பிரதிநிதியுமான லியாவ் லிஜியாங் கூறுகையில்,

அரபு லீக்குடன் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, சீன-அரபு பொது சமூகத்தை உருவாக்க சீனா விரும்புகின்றது என்றார்.

அரபு லீக்கின் துணை தலைமை செயலாளர் உசாம் சாகி, சீனாவின் நன்கொடை நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தார் என்று அரபு லீக்கின் செயலாளரகம் தெரிவித்தது.