பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் ஆறுதல்
2022-04-18 16:45:31

பிலிப்பைன்ஸை சூறாவளி தாக்கியது குறித்து, அந்நாட்டு அரசுத் தலைவர் டுடெர்டேவுக்கு சீன அரசுத்  தலைவர் ஷிச்சின்பிங் ஆறுதல் தெரிவித்தார்.

சீன அரசு மற்றும் மக்களின் சார்பில், சூறாவளி தாக்குதலில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதலையும் தெரிவிக்கிறேன். இயன்றளவில் பிலிப்பைன்ஸுக்கு உதவி வழங்க சீனா விரும்புகிறது. பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் மக்கள், இப்பேரழிவிலிருந்து மீண்டு, தாயகத்தை புனரமைப்பார்கள் என்று ஷிச்சின்பிங் நம்பிக்கை தெரிவித்தார்.

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சர் லொசினுக்கு ஆறுதல் தெரிவித்தார். 

 படம்:VCG