சீனாவின் வைரஸ் சோதனை திறமை அதிகரிப்பு
2022-04-18 10:27:36

தற்போது வரை சீனாவில் 13 ஆயிரத்து 100 மருத்துவ மற்றும் சுகாதார நிறுவனங்கள் நியூக்ளிக் அமிலச் சோதனை செய்யும் திறனைக் கொண்டு, ஒரு நாளுக்கு 5 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் குழாய்களின் மாதிரிகளைச் சோதிக்க முடியும். சீன அரசவையின் கூட்டு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இயங்குமுறையிலிருந்து இத்தகவல் தெரிய வந்துள்ளது.

சீனாவில் தற்போது சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் தொழில் நுட்பப் பணியாளர்கள் புதிய ரக கரோனா வைரஸ் நியூக்ளிக் அமிலச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 37 வகைகளிலான சோதனை கருவிகளின் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடளவில் சோதனை முடிவு பொதுவாக 6 மணிநேரத்துக்குள் கிடைக்கும். சீஆன், ட்சேங்சோ, தியன்ஜின் உள்ளிட்ட இடங்களில், ஒரு நாளுக்குள் 1 கோடியே 20 லட்சம் மக்களிடையில் இச்சோதனை நிறைவேற்றப்பட முடியும்.

கோவிட்-19 நோய் தொற்று பரவலை கூடியவிரைவில் தோற்கடிக்கும் விதம், தற்போதைய ஷாங்காய் மாநகரில் நியூக்ளிக் அமில சோதனைப் பணி முழுமூச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.