முதல் காலாண்டில் சீராக வளர்ந்த சீனப் பொருளாதாரம்
2022-04-18 15:36:24

பூர்வாங்க கணப்பின்படி, இவ்வாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 27 லட்சத்து 780 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட 4.8 விழுக்காடும், கடந்த ஆண்டின் 4ஆவது காலாண்டில் இருந்ததை விட 1.3 விழுக்காடும் அதிகம் என்பதை சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 18ஆம் நாள் வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன. மேலும், முக்கிய ஒட்டுமொத்த குறியீடுகள் நியாயமான வரம்புக்குள் உள்ளன. பொருளாதாரக் கட்டமைப்பு மேம்பட்டு வருகிறது என்றும் தெரிய வந்துள்ளது.

இவ்வாண்டில் மேலும் சிக்கலான மற்றும் மோசமான சர்வதேச சூழ்நிலை, உள்நாட்டில் பரவலாக ஏற்பட்ட கோவிட்-19 நோய் தொற்று ஆகியவை பொருளாதாரச் செயல்பாட்டுக்கு பெரும் பாதிப்பைக் கொண்டு வந்துள்ளன. இந்நிலையில் பல்வேறு இடங்களின் வாரியங்கள் நிதானத்தில் முன்னேற்றம் அடையும் கொள்கையைப் பின்பற்றி, இடர்பாடுகளையும் சவால்களையும் பயனுள்ள முறையில் சமாளித்து வருவதால், தேசியப் பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது என்று தேசிய புள்ளிவிவரப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபு லிங்ஹுய் தெரிவித்தார்.