உலகப் பொருளாதாரத்துக்கு நிலைப்புத் தன்மையைக் கொண்டு வரும் சீனப் பொருளாதாரம்
2022-04-19 11:17:57

சீனா 18ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 4.8விழுக்காடு அதிகமாகும். எதிர்பார்த்ததை விட அதிகம் என்பது பல வெளிநாட்டு செய்தி ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும் சிக்கலான சர்வதேச நிலைமை மற்றும் உள்நாட்டின் கோவிட்-19 பரவலின் பாதிப்பிலும், இந்த வளர்ச்சி நனவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டின் முதல் காலாண்டு, சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து மீட்சி பெற்று வருகிறது. உறுதியற்ற உலகப் பொருளாதாரத்துக்கு நிதானத் தன்மையைக் கொண்டு வந்துள்ளது.

ஒரு புறம், கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை மற்றும் பொருளாதார சமூகத்தின் வளர்ச்சியைச் சீன அரசு ஒருங்கிணைத்து வருகிறது. மற்றொரு புறம், சீன தொழில்நிறுவனங்கள் சொந்த சாதகத்தைப் பயன்படுத்திக் குறிப்பாகப் புதுமையாக்கம் செய்து, வளர்ச்சியைத் தூண்டியுள்ளன.

சீனப் பொருளாதாரம் மீது நம்பிக்கை கொண்டுள்ளதால், 66விழுக்காடு தொழில்நிறுவனங்கள் இவ்வாண்டு சீனாவிலுள்ள முதலீட்டை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக சீன-அமெரிக்க வணிக சங்கம் மார்ச் வெளியிட்ட சீன வணிகச் சூழல் பற்றிய ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதே வேளை, இன்னல்களைச் சந்தித்தாலும், சீனா எப்போதும் பொறுப்புணர்வுடன் உலகத் தொழில் சங்கிலிலின் நிலையான இயக்கத்தை உறுதி செய்து வருகிறது.

சீன சந்தை உலக சந்தையாக மாறி வருகிறது. மேலும் உயர் நிலையான திறப்புடன் உலகத்தைச் சீனா ஈர்த்து வருகிறது.