மனித உரிமை நடைமுறைகளுக்கான அமெரிக்க அறிக்கை மீது வங்காளத் தேசத்தின் குற்றச்சாட்டு
2022-04-19 10:31:42

அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட பல்வேறு நாடுகளின் மனித உரிமை நடைமுறைகள் குறித்த அறிக்கையில், வங்காளத் தேசத்தின் மனித உரிமைகளின் நிலைமை பற்றி குறைகூறப்பட்டுள்ளது. இது குறித்து வங்காளத் தேசத்தின் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அலாம் 17ஆம் நாள் பேட்டியளிக்கையில், இவ்வறிக்கையில் அடிப்படை குறைபாடுகள் உள்ளன. இதற்கு விளக்கம் கொடுக்குமாறு அமெரிக்காவுக்கு வங்காளத் தேச அரசு விரைவில் கோரிக்கை விடுக்கவுள்ளது. உள்நாட்டு விவகாரங்களை மேலாண்மை செய்வது, வங்காளத் தேச அரசின் பொறுப்பாகும். வெளிநாட்டின் தலையீடு, தேவைப்படாது என்று தெரிவித்தார்.