பசிபிக் தீவு நாட்டில் பயன் கிடைக்காத அமெரிக்காவின் அரங்கேற்றம்
2022-04-19 21:16:57

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையத்தைச் சேர்ந்த இந்தோ-பசிபிக் விவகார ஒருங்கிணைப்பாளர் கென்பல் தலைமையிலான ஒரு குழு சாலமன் தீவுகளில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெள்ளை மாளிகை திங்கள்கிழமை அறிவித்தது. இதனிடையில் சீனாவுடன் தொடர்புடைய விவகாரம் இப்பயணத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அண்மையில் சாலமன் தீவுகளுடன் அரசுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான கட்டுக்கோப்பு உடன்படிக்கையை சீனா உருவாக்கியது. இந்த ஒத்துழைப்பு சர்வதேச சட்டத்துக்கும் சர்வதேச பழக்கவழக்கங்களுக்கும் ஏற்றது. எந்த ஒரு மூன்றாவது தரப்புக்கு எதிராக அமையவில்லை. ஆனால், இது பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அமெரிக்காவும் ஆஸ்திலேரியாவும் கருதி, சீன- சாலமன் தீவுகள் உறவைச் சீர்குலைக்க முயன்று வருகின்றன.

சாலமன் தீவுகள் சுதந்திரமான இறையாண்மை நாடாகும். எந்த ஒரு நாட்டுடனும் நட்புறவை உருவாக்கும் உரிமை அதற்கு உள்ளது. அமெரிக்காவின் அரங்கேற்றம் தோல்வி அடைவது உறுதி.