இலங்கைக்கு சீன மனித நேய உதவி
2022-04-19 16:24:08

சீனச் சர்வதேச வளர்ச்சிக்கான ஒத்துழைப்புப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷுவெய் ஏப்ரல் 19ஆம் நாள் கூறுகையில், இலங்கையின் பொருளாதாரம் இன்னல் மிக்க நிலைமையில் உள்ளது. பாரம்பரிய நட்பார்ந்த அண்டை நாடாக, இலங்கைக்கு அவசர மனித நேய உதவியை வழங்க சீன அரசு முடிவு செய்துள்ளது. இலங்கை அரசு மற்றும் பொது மக்கள் தற்காலிக இன்னல்களைச் சமாளித்து, பொருளாதார மற்றும் சமூகத்தின் நிலைத் தன்மையையும் வளர்ச்சியையும் பேணிக்காப்பார்கள் என்று நம்புகின்றேன் என்று தெரிவித்தார்.