ராணுவக் கட்டுப்பாட்டில் அமெரிக்காவின் பதிவு
2022-04-19 19:11:36

அமெரிக்கா ஆண்டுதோறும் ராணுவக் கட்டுப்பாடு தொடர்பான அறிக்கையை வெளியிட்டு, இதில் நீதிபதியாகச் செயற்பட்டு, இதர நாடுகளின் ராணுவக் கட்டுப்பாடு மற்றும் அணு ஆயுத பரவல் தடுப்புக் கொள்கை பற்றி ஒன்றுக்குப் பத்தாக பேசுவதுடன் ,தன்னைத் தானே மாதிரியாகப் பரப்பி கூறி வருகின்றது. இது மிக அபத்தமான செயலாகும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வேன்பின் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் கூறினார்.

ஐஎன்எஃபு ஒப்பந்தம், திறந்த ஆகாய ஒப்பந்தம் ஆகியவற்றிலிருந்து அமெரிக்கா விலகியது. ராணுவ வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட மறுத்தது. ஈரான் அணு ஆற்றல் பிரச்சினையில் நிலையற்ற நிலைப்பாட்டைக் காட்டியுள்ளது. மேலும், இது வெளிநாடுகளுக்கு அணு முனையை ஏற்றிச்செல்லக் கூடிய ஏவுகணைகளை விற்பனை செய்யும் நாடாகவும் உள்ளது.