சீனாவின் ஹுவாலாங்-1 அணு உலையுடன் கூடிய புதிய தொகுதி செயல்படத் தொடங்கியது!
2022-04-19 14:32:46

சீனாவால் உருவாக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை அணு உலையான ஹுவாலாங்-1 இன் மூலம் இயக்கப்படும் பாகிஸ்தானின் புதிய அணுசக்தி மின்னாக்கிகள் தொகுதி வணிக பயன்பாட்டுக்கு வந்தது என்று சீன தேசிய அணுசக்தி நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்தது.

பாகிஸ்தானின் கராச்சி-3 எனும் புதிய அணுசக்தி மின்னாக்கிகள் தொகுதி, சீனாவின் ஹுவாலாங்-1 அணு உலை தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் உலகின் நான்காவது தொகுதியாகும். கராச்சி-2 மற்றும் கராச்சி-3 ஆகிய தொகுதிகள், ஹுவாலாங்-1 இன் மூலம் இயக்கப்படுகிறது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு கிட்டத்தட்ட 2000 கோடி  கிலோவாட் மின்சாரத்தை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  

இத்திட்டத்தின் கட்டுமானமானது உள்ளூர் பொருளாதாரம் மற்றும் தொடர்புடைய தொழில்களை மேம்படுத்த உதவியுள்ளதாக சீன தேசிய அணுசக்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.