ரஷியாவின் மீதான பொருளாதார போர் தோல்வி
2022-04-19 11:07:11

முன்பு கண்டிராத அழுத்தத்தை ரஷியா பொருளாதாரம் ஏற்றுக் கொண்டுள்ளது. மேலை நாடுகள் ரஷியாவின் மீது தொடுத்த திடீர் பொருளாதாரத் தாக்குதல் தோல்வியடைந்துள்ளது என்று ரஷிய அரசுத் தலைவர் புத்தின் 18ஆம் நாள் தெரிவித்தார்.

பொருளாதார நிலைமை பற்றிய காணொளி கூட்டத்தில் புத்தின் கூறுகையில்,

ரஷிய பொருளாதாரம் எதிர்நோக்குகின்ற முக்கிய எதிர் முறை காரணி மேலை நாடுகளின் தடை நடவடிக்கையால் ஏற்பட்டது என்றார்.

தடை நடவடிக்கை மேற்கொண்ட நாடுகளுக்கும், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார புள்ளிவிவரங்கள் மோசமாகியுள்ளன. அந்த நாடுகளின் பணவீக்கம் மற்றும் வேலையின்மை விகிதம் அதிகரித்து வருகின்றன என்று புத்தின் தெரிவித்தார்.