2022ஆம் ஆண்டு ஐ.நா.வின் சீன மொழி தினம்
2022-04-20 20:01:12

2022ஆம் ஆண்டு ஐ.நா.வின் சீன மொழி தினம் மற்றும் சீன ஊடகக் குழுமத்தின் 2ஆவது வெளிநாட்டு காணொளி விழா ஏப்ரல் 20ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெற்றது.

பண்பாடுகளின் பல்வகைத் தன்மையை ஊக்குவிக்க ஐ.நா. பாடுபட்டு வருகின்றது. சீன மொழி, உலகில் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகும். அது பரப்பியுள்ள பண்பாடு மற்றும் அறிவுத்திறன் மனிதக் குல நாகரிகத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும் என்று ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் தலைமை இயக்குநர் டாட்டியானா வரோவயா இந்நடவடிக்கையில் கூறினார்.

இதில் சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹை சியோங் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார். புதிய காலத்தில் சீனப் பாரம்பரிய பண்பாடு மற்றும் புத்தாக்க வளர்ச்சியை இந்த வெளிநாட்டு காணொளி விழா வெளிப்படுத்தும். உலகின் பல்வேறு நாகரிகங்களின் சிறப்புகளை இது காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார்.