2022 உலகப் பொருளாதாரம் 3.6விழுக்காடு அதிகரிப்பு:உலக நாணய நிதியம் கணக்கீடு
2022-04-20 10:17:19

புதிய உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் 19ஆம் நாள் வெளியிட்டது. 2022ஆம் ஆண்டு உலகப் பொருளாதார அதிகரிப்பு 3.6விழுக்காடு ஆகுமென அதில் கணக்கிடப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் கணக்கிடப்பட்டதை விட, இது 0.8புள்ளி குறைந்துள்ளது.

ரஷிய-உக்ரைன் மோதல் மற்றும் ரஷியா மீதான தடை நடவடிக்கைகள் மனித நேய நெருக்கடியை ஏற்படுத்தி உழைப்பு சந்தை மற்றும் சர்வதேச வர்த்தகத்தைச் சீர்குலைத்துள்ளதோடு, உலக நிதிச் சந்தையிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் கோவிட்-19 தடுப்பூசிப் பற்றாக்குறையால், புதிய சுற்று தொற்றுநோய் பரவல் ஏற்படக் கூடும் எனவும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.