ரஷிய-உக்ரைன் மோதல் குறித்து பல்வேறு தரப்புகளின் கருத்து
2022-04-20 10:47:47

ரஷியாவும் உக்ரைனும் வெகுவிரைவில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று 7 நாடுகள் குழு, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ ஆகியவற்றின் தலைவர்கள் 19ஆம் நாள் நடைபெற்ற காணொளி கூட்டத்தில் தெரிவித்தனர்.

மேலும், ரஷியாவின் மீதான அழுத்தங்களை அதிகரிக்கும் விதம், மேலதிகமான தடை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

தவிரவும், பொது மக்களை மோதல் பகுதியிலிருந்து விலக்கி, ஐ.நா மற்றும் இதர ஒத்துழைப்பு கூட்டாளிகள் மோதல் பகுதிக்கு தடையின்றி மனித நேய உதவி பொருட்களை ஏற்றிசெல்வதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், மரபுவழி ஈஸ்டெர் விழா காலத்தில் 4 நாட்கள் நீடிக்கும் மனித நேய போர் நிறுத்தத்தை ரஷியாவும் உக்ரைனும் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா தலைமை செயலாளர் குட்ரேஸ் 19ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார்.